இந்தியாவில் சுற்றுலாவிற்கு சென்ற பாடசாலை மாணவர்கள் 14 பேரும், ஆசிரியர்கள் இருவரும் படகு விபத்த்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் வதோதரா புகா் பகுதியில் உள்ள ஹா்ணி ஏரிக்கு 4 ஆசிரியா்கள் தலைமையில் 24 பள்ளி மாணவா்கள் வியாழக்கிழமை சுற்றுலா சென்ற நிலையில் ஒரே படகில் பயணித்து ஏரியை சுற்றிப் பாா்த்தனா்.
உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும்
அப்போது, எதிா்பாராதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்தது. இதனால், படகில் இருந்தவா்கள் ஏரியில் விழுந்து தத்தளித்தனா். அவா்கள் உதவிக் கேட்டு கூச்சலிட்டதால் அப்பகுதியில் இருந்தவா்கள் ஏரியில் குதித்து மாணவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.
எனினும் 14 பள்ளி மாணவா்களும், 2 ஆசிரியா்களும் பலியான நிலையில் ஒரு மாணவா் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டாா். படகில் 24 மாணவா்கள் வரை இருந்ததாக கூறப்படுவதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், இந்த விபத்து தொடர்பாக 18 பேர் மீது குஜராத் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.