இந்த நாட்களில் அதிக பணத்தை செலுத்தி வாடகைக்கு வீடுகளுக்கு வருபவர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வீட்டு உரிமையாளர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தவிர, வீடுகளை வாடகைக்கு விடும் நபர்களின் நடவடிக்கைகள் குறித்தும் உள்ளூர் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என நிஹால் தல்துவ சுட்டிக்காட்டியுள்ளார்.
வாடகை வீடு
தற்போது நடைபெற்று வரும் யுக்திய நடவடிக்கை காரணமாக போதைப்பொருள் கடத்தல்காரர்களில் பெரும்பாலானோர் காணாமல் போயுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் குடும்பங்களுடன் காணாமல் போயுள்ளதாகவும் அவர்கள் வாடகைக்கு வீடுகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதென பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.