எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் யுக்திய என்னும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை இடைநிறுத்தப்படாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதிக்குள் போதைப் பொருளை இல்லாதொழிப்பது தமது இலக்கு என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
எவ்வித சலுகைகளும் வழங்கப்படாது
யுக்திய தேடுதல் வேட்டையை நிறுத்துமாறு சர்வதேச சமூகம் பிரயோகித்து வரும் அழுத்தங்களை பொருட்படுத்தப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதாள உலகக் குழு செயற்பாடுகளை இல்லாதொழிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.