2024 ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டின் மூலம் 10 பில்லியன் ரூபாவை தேர்தல்களை நடத்துவதற்காக அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.
அரசு கொண்டுள்ள வரையறுக்கப்பட்ட நிதி இயலுமையில், 2024 ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீட்டின் மூலம் 10 பில்லியன் ரூபா தேர்தல்களை நடத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலுக்கான செலவுகள்
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்குரிய செலவுகளை குறித்த நிதி ஒதுக்கீட்டிலிருந்து முகாமைத்துவம் செய்ய வேண்டுமெனவும் அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது.
எனினும் அந்த இரண்டு தேர்தல்களையும் நடத்துவதற்கு முன்னர் தேவை ஏற்பட்டால் தொடர்புடைய தேர்தல் சட்டங்களுக்கான திருத்தங்களை நாடாளுமன்ற அங்கீகாரத்தின் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட வேண்டுமெனவும் அமைச்சரவை மேலும் கவனம் செலுத்தியுள்ளது.
மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறித்த விடயங்களின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை உடன்பாடு தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.