ஐக்கிய மக்கள் சக்தியில் முன்னாள் கடற்படைத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் தலைவருமான தயா சந்தகிரி இணைந்துள்ளார்.
கட்சியின் தலைவரான சஜித் பிரேமதாசவைச் சந்தித்து அவர் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
கடற்படைக் கொள்கைகளுக்கான ஆலோசகர்
மேலும் இவர், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கடல் மற்றும் கடற்படைக் கொள்கைகளுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தயா சந்தகிரி இலங்கை கடற்படையின் 14 ஆவது கடற்படைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.