பகல் நேரத்தில் சாப்பிடும் உணவில் கவனம் செலுத்துவதை விட கூடுதலாக இரவு உணவில் அக்கறை செலுத்துவது அவசியம்.
ஏனெனில், இரவில் தூங்கும் போதுதான் உடல் தன்னை பழுது பார்க்கும் வேலைகளில் ஈடுபடும். எனவே, இரவு நேரத்தில் நாம் எளிதில் ஜீரணமாகக்கூடிய எளிமையான உணவை உண்ண வேண்டும்.
இரவில் சாப்பிடக் கூடாத உணவுகள் பற்றி பார்ப்போம்.
ஐஸ்கிரீம்
இரவில் ஐஸ்கிரீம் உட்கொள்வது மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கும். இதனால், இரவில் தூங்குவதற்கு சிரமம் ஏற்படும்
தக்காளி
தக்காளியில் அசிடிட்டியை (Acidity) ஏற்படுத்தக்கூடிய அமிலங்கள் அதிகமாக இருப்பதால், இவற்றை இரவில் தவிர்ப்பது நல்லது.
கிரீன் டீ
க்ரீன் டீயில் அதிக அமிலம் உள்ளது. இதை, இரவில் குடிக்கும்போது அதிக இதயத் துடிப்பு, பதட்டம், கவலை ஆகியவை ஏற்படலாம். எனவே கிரீன் டீயை பகல் நேரத்தில் குடிப்பது நல்லது.
சீஸ்
இரவு நேரத்தில் சீஸ் உட்கொள்வது தூக்கத்தின் தரத்தை குறைப்பதுடன், விழிப்புணர்வை அதிகரிக்கும்.
பொரித்த உணவுகள்
பொரித்த உருளைக்கிழங்கு மற்றும் கெட்ச்அப் -யில் அதிக அமிலம் உள்ளது. இவை இரண்டையும் ஒன்றாக இரவு நேரத்தில் சாப்பிடுவது பல உபாதைகளை ஏற்படுத்தும்.
சிட்ரஸ் நிறைந்த பழங்கள்
ஆரஞ்சு, திராட்சை போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்கள் நெஞ்செரிச்சலை அதிகரிக்கும். எனவே, இரவு நேரத்தில் சிட்ரஸ் நிறைந்த பழங்களை தவிர்ப்பது நல்லது.
காபி மற்றும் டீ
இரவில் நீங்கள் பருகும் ஒரு கப் காபி மற்றும் டீயின் விளைவு எட்டு முதல் பதினான்கு மணி நேரம் வரை நீடிக்கலாம். இது உங்கள் தூக்கத்தை கட்டுப்படுத்தும்.
எனவே, இவற்றை காலையில் பருகுவது நல்லது.
வெங்காயம்
வெங்காயத்தில் அதிக ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், அவற்றை இரவில் சாப்பிடுவது நல்லதல்ல.
இரவு நேரத்தில் வெங்காயம் சேர்த்த சாலட் சாப்பிடுவதால் வயிற்றில் வாயு உருவாகும். இதனால், உங்கள் தொண்டை பகுதியில் ரிஃப்ளக்ஸ் அமிலம் சுரக்கப்படும்
அதிக இனிப்பான உணவுகள்
அதிக சர்க்கரை உணவு அல்லது தானியங்களை உட்கொள்வது ரத்தத்தின் சர்க்கரையை அதிகரிக்கும். அதுமட்டுமல்ல உங்களின் தூக்கத்தையும் குறைக்கும்.