நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இவ்வாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கமைவாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக அதிகரிக்கப்பட்ட உணவு, பயண மற்றும் தங்குமிட கொடுப்பனவு அடுத்த வார தொடக்கத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவு
இதுவரையில் பெறப்பட்ட கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக, வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவில் பாதி உடனடியாக வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
கனிஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உதவித்தொகை 17,000 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது.
அதில் 11,800 ரூபா உடனடியாக வழங்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.