இலங்கையில் விலை உயர்வால், எரிபொருள் விற்பனை சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளதாக ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூட்டுத்தானத்திற்கு சொந்தமான நிரப்பு நிலையங்களுக்கான தரகு பணம் 2.75 சதவமாகும் மற்ற நிரப்பு நிலையங்களுக்கு கிடைக்கும் தரகு பணம் 2.95 சதவீதமாகும். இந்த தரகு பணத்தில் இருந்து நிரப்பு நிலைய உரிமையாளர்கள் வருமான வரி மற்றும் பிற செலவுகளை ஈடுகட்டுகின்றனர்.
நில வாடகை
பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து நில வாடகை மற்றும் விற்பனை வாடகை என மாதம் ஒன்றுக்கு 18 லட்சத்திற்கு மேல் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வசூலிக்கிறது.
கடந்த சில நாட்களாக ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்ட 35 சதவீத தரகு தொகையை வசூலிக்கும் முயற்சிக்கு பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் எரிபொருள் மீது விதிக்கப்பட்ட வற் வரியை பெட்ரோல் நிலைய உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்க பெட்ரோல் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
12 ஆண்டுகளுக்கு முன்பு வரை, பிரதிநிதித்துவ நிரப்பு நிலையங்கள் உட்பட அனைத்து நிரப்பு நிலையங்களும் பெட்ரோலியம் சட்டப்பூர்வ நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது. நிரப்பு நிலையங்களை நவீனப்படுத்துவதற்கு வட்டியில்லா கடன்களும் வழங்கப்பட்டன.
எரிபொருள் நிரப்பு நிலையங்கள்
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமையினால், விரைவில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், பெற்றோலிய கூட்டுத்தாபனம் 127 பில்லியன் ரூபாய்க்கு மேல் இலாபம் ஈட்டியுள்ளது.
உலக சந்தையின் தற்போதைய விலை மற்றும் எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைகளில் உள்ள எரிபொருளின் அளவு ஆகியவற்றிற்கமைய, ஒரு லீற்றர் பெற்றோல் 20 ரூபாவினாலும், டீசல் லீற்றர் 22 ரூபாவினாலும், குறைக்கப்பட்டிருக்கலாம் என ஆனந்த பாலித மேலும் குறிப்பிட்டுள்ளார்.