நாட்டில் தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் மிகவும் வரண்ட காலநிலை காரணமாக இது சிறுவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இரண்டு தடவைகளாவது குளிப்பாட்ட வேண்டும்
காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ள சிறுவர்களுக்கு கூட இந்நாட்களில் குளிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிறுவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு தடவைகளாவது குளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர் ,
ஒருவருக்கு தோல் நோய்கள் இருப்பின் காலையிலும் இரவிலும் சுமார் 20 நிமிடங்களேனும் நீரில் இருப்பதன் மூலம் ஓரளவு கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.