சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 25 இலங்கையர்கள் உட்பட 186 வெளிநாட்டவர்களை நாடு கடத்துவதற்கு மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி வீசா மீறல் மற்றும் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்ட குழுவொன்றே நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
25 இலங்கையர்களுக்கு மேலதிகமாக, 83 பங்களாதேஷ் பிரஜைகள், 46 இந்திய பிரஜைகள் மற்றும் 8 நேபாள பிரஜைகள் ஆகியோரே நாடு கடத்தப்படவுள்ளனர்.
அதேசமயம் அவர்களை நாடு கடத்துவதற்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.