அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஸ்டெர்லிங் பகுதியில் வீடு வெடித்துச் சிதறிய விபத்தில் தீயை அணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட போது, அதிகளவில் புகை மற்றும் தீப்பிழம்புகள் எழுந்தன.
இதில் 10 தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 2 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலத்திற்கடியில் சுமார் ஆயிரத்து 890 லிட்டர் அளவுள்ள புரொப்பேன் தொட்டியில் இருந்து கசிவு ஏற்பட்டு வெடித்துச் சிதறிய வீட்டிற்கு வெளியே துர்நாற்றம் வீசுவதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.