கொழும்பு புறக்கோட்டை பகுதியில் மனித உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயன கலவைகள் அடங்கிய அழகுசாதனப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்த 04 கடைகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நால்வர் கைது
இதன்போது அந்த கடைகளின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டதுடன், மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் 1143 வகையான அழகுசாதனப் பொருட்களையும் விசாரணை அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டன.
இந்தச் சுற்றிவளைப்பு நேற்று பிற்பகல் புறக்கோட்டை இரண்டாவது குறுக்குத் தெருவில் வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22, 25, 45, 52 வயதுடைய கலகெடிஹேன, மொரட்டுவை மற்றும் வத்தளை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.