நாட்டின் சில மாவட்டங்களில் வெப்பமான காலநிலை குறித்து அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
வெப்பமான காலநிலை
இதன்படி, மனித உடலால் உணரக்கூடிய அதிகபட்ச வெப்பநிலை இன்று வடமேல் மாகாணத்திலும் கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் எச்சரிக்கை மட்டத்தில் அவதானிக்கப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், பணியிடங்களில் முடிந்தவரை நிழலில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை வீட்டில் உள்ள முதியவர்கள் மற்றும் நோயுற்றவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.