யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய துணைத் தூதராக 33 வயதான சாய் முரளி அடுத்த வாரம் பதவியேற்கவுள்ளார்.
யாழில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜின் பதவிக்காலம் எதிர்வரும் 25ஆம் திகதியுடன் நிறைவுறும் நிலையில், அவர் டில்லிக்கு மாற்றலாகிச் செல்கிறார்.
இதனால் ஏற்படும் வெற்றிடத்திற்கு யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் காணப்படும் வெற்றிடத்துக்கே சாய் முரளி நியமிக்கப்பட்டுள்ளார்.
சாய் முரளி 1991ஆம் ஆண்டு பிறந்தவர் (வயது 33). இவர் 2019ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சில் இணைந்து தற்போது வரை ரஷ்யாவின் மாநிலமொன்றில் இந்திய தூதரகத்தின் கொன்ஸிலர் ஜெனரலாக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.