தங்காலை, மாவெல்ல துறைமுகத்தின் அருகே கடலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெலியத்த, தெமட்டாவை பகுதியைச் சேர்ந்த காவ்யா ஆகர்ஷ விஜேசிங்க என்ற 24 வயதுடைய இளைஞனே கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
பொலிஸார் விசாரணை
மாவெல்ல பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்த அவர், பின்னர் அந்த வீட்டில் பலருடன் கடலில் நீராடும்போது அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், காணாமல் போன இளைஞரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை தங்காலை கடற்படை பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.