லிட்ரோ நிறுவனம் மார்ச் மாதத்துக்கான எரிவாயு விலையில் மாற்றங்களை ஏற்படுத்தப் போவதில்லை என அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
அதன்படி தனது உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை மாதாந்த விலை சூத்திரத்தின் அடிப்படையில் மாற்றமில்லை எனவும் லிட்ரோ நிறுவனம் கூறியுள்ளது.
பொதுமக்கள் எதிர்கொள்ளும் நிதி சிக்கல்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜனவரியில் அறிவிக்கப்பட்ட விலை உயர்வையடுத்து, தற்போதுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள்,
எரிவாயு சிலிண்டர்களின் விலைகள்
12.5 கிலோ கிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 4,250 ரூபாயாகவும்,
5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1,707 ரூபாயாகவும்
2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 795 ரூபாயாகவும் அறவிடப்படுகின்றன.
அதேசமயம் , லிட்ரோ நிறுவனம் பெப்ரவரி மாதத்திலும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் திருத்தம் செய்யவில்லை.
இதேவேளை, லாப் சமையல் எரிவாயு நிறுவனம் மார்ச் மாதத்துக்கான விலை திருத்தம் குறித்த தனது முடிவை இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.