ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பலில் 529 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான வளர்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சில முக்கிய திட்டங்களில் அவர்கள் பங்கேற்பார்கள்.
கப்பலில் வந்தவர்கள் நாட்டின் பல முக்கிய இடங்களை பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நாளை நாட்டை விட்டு வெளியேறவுள்ளது.



















