வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்ட சாந்தனின் புகழுடலுக்கு பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்ணீருக்கு மத்தியில் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக மாங்குளம் பகுதிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
அரசியல் கைதி தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) புகழுடலுக்கான இறுதி அஞ்சலி வவுனியா போராளிகள் நலன்புரி சங்கத்தில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.
தற்பொழுது மக்கள் அஞ்சலிக்காக வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
சென்னையில் நோய்வாய்ப்பட்டு கடந்த 28ஆம் திகதி உயிர் துறந்த சாந்தனின் புகழுடல் நேற்று முன்தினம் (01) இலங்கைக்கு எடுத்துவரப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் அஞ்சலி
இந்த நிலையில் வவுனியாவில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள சாந்தனின் புகழுடல் தொடர்ந்து மாங்குளம் பகுதிக்கு எடுத்துவரப்படவுள்ளது.
பின்னர் கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலியின் பின்னராக யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துவரப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணிவரை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.