குருநாகல் பிரதான பேருந்து நிலையத்தில் 02 வயது குழந்தையை விட்டுச் செல்ல வந்த தாயை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்காக போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வெல்லவ – மகுல்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதான தாய், நேற்று முன்தினம் பிற்பகல் குழந்தையுடன் பிரதான பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
பல மணி நேரமாக அந்த பெண் நின்றமையினால் போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தாயின் மோசமான செயல்
கணவருடன் வாழ முடியாததால் குழந்தையை தத்தெடுக்க விரும்பும் ஒருவரிடம் கொடுக்க அங்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.
எனினும், போக்குவரத்து அதிகாரசபையின் அதிகாரிகள் தாயையும் குழந்தையையும் அந்த இடத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க ஏற்பாடு செய்தனர்.
பின்னர் குருநாகல் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் அவர்களை பொலிஸாரிடம் அழைத்துச் சென்று வாக்குமூலங்களை பதிவு செய்து தாயின் உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.