களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதேவேளை, நாட்டின் மற்றைய பகுதிகளில், பிரதானமாக வறண்ட காலநிலை நிலவுமென்றும் திணைக்களம் தெரிவத்துள்ளது.
கொழும்பில் இருந்து புத்தளம் மற்றும் மன்னாரிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-45)கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் என்றும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
முன்னெச்சரிக்கை
மேலும், கொழும்பில் இருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளும் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
இந்நிலையில், காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.