அசைவ பிரியர்களின் இறைச்சி உணவுகளில் எந்த இறைச்சி அதிகமாகக சாப்பிடப்படுகின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் இறைச்சி பிரியர்கள் தான். ஆடு, கோழி, காடை, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி மட்டுமின்றி கடல் உணவுகளை அதிகமாக சாப்பிடுகின்றனர்.
இறைச்சி உணவுகளில் அதிகமான சத்து கிடைக்கிறது, அதிக சுவை கொண்டதால் வாரத்திற்கு ஒரு முறையாவது எடுத்து சாப்பிட ஆரம்பித்துள்ளனர்.
விரதத்தின் காரணமாக அல்லது வாய்ப்பு இல்லாத காரணத்தால் ஒன்றிரண்டு வாரங்கள் நாம் இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்கிறோம்.
உலகில் அதிகம் சாப்பிடப்படும் இறைச்சிகள்
உலகில் அதிகம் சாப்பிடப்படும் இறைச்சிகளில் முதலிடத்தில் பன்றி இறைச்சி உள்ளது. இவை உலகில் மிகவும் பிரபலமான இறைச்சிகளில் ஒன்றாகும்.
உலகில் அதிகம் சாப்பிடப்படும் இறைச்சிகளில் இரண்டாவது இடத்தில் கோழி இறைச்சி இருக்கின்றது.
மூன்றாவதாக உலகில் அதிகம் மக்கள் விரும்பி சாப்பிடும் இறைச்சிகளில் மாட்டு இறைச்சி உள்ளது.
உலகம் முழுவதும் அதிகமாக ஆடுகள் இருந்தாலும், இவற்றினை மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுவதில்லை. உலகில் அதிகம் சாப்பிடும் ஆட்டு இறைச்சி நான்காவது இடத்தில் உள்ளது.
ஐந்தாவதாக வான்கோழி இறைச்சி இருக்கின்றது. இது வட அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் பிரபலமாகவே இருக்கின்றது.
சீனாவிலும் அமெரிக்காவிலும் மிகவும் பிரபலமான இறைச்சியாக வாத்து இறைச்சி இருக்கின்றது. இது உலகில் அதிகம் சாப்பிடப்படும் வகையில் ஆறாவது இடத்தில் இருக்கின்றது.
உலகில் அதிகம் சாப்பிடப்படும் இறைச்சியில் எருமை இறைச்சி இருக்கின்றது. இவை ஆசிய நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளது.
சீனா மற்றும் வடகொரியாவில் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் இறைச்சியாக முயல் இருக்கின்றது. இது உலக அளவில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.
உலகில் அதிகம் சாப்பிடப்படும் ஒன்பதாவது இடத்தில் மான் இறைச்சி இருக்கின்றது. மான் இறைச்சியை ஜப்பான் நாட்டினர் அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர்.