அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் தொடர் வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.
இதற்கமைய இந்த வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 5.6 சதவீதத்தால் வலுப்பெற்றுள்ளது.
தற்போது நாட்டின் வணிக வங்கிகளில் அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 305 ரூபா 64 சதமாக பதிவாகியுள்ள நிலையில், அதன் கொள்முதல் விலை 300 ரூபா 60 சதமாகவும் மற்றும் விற்பனை விலை 310 ரூபா 20 சதமாகவும் காணப்படுகிறது.
மாற்றங்களின் பயன்
அதன்படி கடந்த 2023 ஆம் ஆண்டு அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 12.1 சதவீதமாகவும், இந்த வருடத்தின் மூன்று மாதங்களில் ரூபாயின் பெறுமதி 5.6 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், மாற்று விகிதத்தில் ஏற்படும் மாற்றங்களின் பயனை வாடிக்கையாளருக்கு பெற்றுக் கொடுப்பதற்கான முறைமை விரைவாக தயாரிக்கப்பட வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.