கொழும்பு விளக்கமறியல் சிறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல கையடக்க தொலைப்பேசிகள் மற்றும் சிம் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அந்த சிறையின் ஜி1 அறையில் சிறை புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது இது நடந்தது. அங்கு 8 கையடக்கத் தொலைபேசிகளும் 11 சிம் அட்டைகளும் காணப்பட்டதாக சிறைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த கையடக்கத் தொலைபேசிகளில் சுமார் மூன்றரை லட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட கருவிகளை பயன்படுத்திய சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.