கண்டியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பூண்டுலோயா பகுதியிலிருந்து கண்டியில் உள்ள நெல்லி கலா சர்வதேச பௌத்த நிலையத்திற்கு வழிபடுவதற்காக பக்தர்கள் குழு ஒன்றை ஏற்றி வந்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும், பேருந்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த பேருந்தில் சாரதியுடன் சுமார் 30 பேர் பயணித்துள்ளதுடன், அவர்கள் அனைவரும் காயமடைந்து பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.