கடமையின் போது அலட்சியமாக செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பொலிஸார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 13ம் திகதி அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பிரபல போதைப் பொருள் வர்த்தகரான சமன் கொல்லா என்றழைக்கப்படும் சமன் பிரியங்கரவின் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு ஒன்று நடத்தப்பட்டிருந்தது.
மேலதிக விசாரணை
அதன் போது பிரதேசவாசிகள் சம்பவம் குறித்த தகவலை பொலிஸாருக்கு வழங்கியுள்ள போதும், அன்றைய தினம் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் தொலைபேசி மற்றும் கணனி இயக்குநர்களாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த தகவலை நிலையப் பொறுப்பதிகாரிக்கு வழங்கத் தவறியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் தற்போது தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு அவர்களுக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.