வெடுக்குநாறிமலை கைது சம்பவத்தை கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு சுலோக அட்டைகளை ஏந்தியவாறு நாடாளுமன்றில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிசிவன் கோவிலில் பொலிஸாரினால் 8 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவர்கள் இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சபையின் பணிகள் சில நிமிடங்கள் தடைபட்டதுடன், சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அறிவித்தார். இதையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் போராட்டத்தை கைவிட தீர்மானித்தனர்.