வட்டவளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பின்வல தோட்டத்தின் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் விழுந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வட்டவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிசு காணாமல் போனதையடுத்து, வீட்டின் பின்புறமுள்ள விவசாய கிணற்றில் இருந்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் வட்டவளை பிரதேசத்தை சேர்ந்த 3 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
சிறுவனின் தாய் வேலை நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாகவும் உயிரிழந்த சிறுவன் குடும்பத்தில் ஒரே பிள்ளை எனவும் கூறப்படுகிறது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.