கிரிஸ்டல் சிம்பொனி என்ற சொகுசு பயணிகள் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (23) காலை பயணிகளை ஏற்றிவந்த குறித்த சொகுசுக் கப்பல் கொழும்பை வந்தடைந்துள்ளது.
அந்தமான் தீவுகளில் இருந்து வந்த இந்தக் கப்பலானது இந்தியா நோக்கி செல்லவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க பயணிகள்
இந்தக் கப்பலில் 186 பயணிகளும் 429 பணியாளர்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன, டச்சு மற்றும் அமெரிக்க பயணிகள் இந்தக் கப்பலில் பயணம் செய்துள்ள நிலையில், அவர்கள் கொழும்பு மற்றும் காலிக்கு செல்ல உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பஹாமாஸ் நாட்டின் கொடியுடன் கொழும்பை வந்தடைந்த இந்த கிரிஸ்டல் சிம்பானி என்ற கப்பலானது இன்று (23) இரவு இந்தியாவுக்கு புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.