இந்தோனேசியாவின் ஜாபா தீவுக்கு வடக்குக் கடலோரப் பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கமானது இன்றையதினம் (24-03-2024) அதிகாலை உணரப்பட்டுள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 8 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் 6.4 அலகுகளாக பதிவானதாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை எனவும், சுனாமி ஏற்படக்கூடும் என்ற அபாய எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படகிறது.