இலங்கை சொந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு புதிய சிக்கல் ஏற்டிடவுள்ளதாகவும், புலம்பெயர்ந்தவர்கள் தாயகத்தில் வீடுகள் வாங்கினால் எதிர்காலத்தில் மாதாந்த வாடகையாக பெருந்தொகை வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நகர் பகுதிகளான கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படும் நிலையேற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையில் சொத்து விபரங்கள் டிஜிட்டல் முறைமையில் நடைமுறைப்படுத்தாமை காரணமாக ஊழல் மோசடிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்தவர்கள் தாயகத்தில் வீடுகளை வாங்கி வாடகைக்கு விடும் பட்சத்தில் மாதாந்தம் வாடகையாக பெருந்தொகை வரியினை செலுத்த வேண்டிய நிலையேற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.