தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டுக்குள் இலங்கையில் பெரிய வெங்காயத்தின் விலை குறைக்கப்படவுள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 375 முதல் 400 ரூபாவுக்குள் நிர்ணயிக்கப்படுமென வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று (24) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு உற்பத்தி
உள்நாட்டிலேயே பெரிய வெங்காய செய்கையை முன்னெடுப்பது தொடர்பில் விவசாய அமைச்சருடன் பேச்சுக்களை முன்னெடுத்துள்ளதாக நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் ஏற்றுமதி தடை
இந்த நிலையில், பெரிய வெங்காய ஏற்றுமதிக்கான தடையை இந்திய மேலும் நீடித்துள்ளது.
இந்தியாவின் இந்த நடவடிக்கை, இந்தியா மாத்திரமின்றி, அந்த நாட்டு ஏற்றுமதியை நம்பியுள்ளோரை பாரியளவில் பாதிக்குமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.