கல்ல காதலில் இன்னுமொருவருடன் செல்லும் பெண் மத்தியில் மிகுந்த கஷ்டத்துக்கு மத்தியில் இரண்டு கணவருடன் வாழும் மனைவியை பற்றிய கருத்து சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகின்றது.
இந்த தகவல் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் திகதி குறித்த பெண்ணுக்கு முதல் திருமணம் நடக்கின்றது. இந்த நிலையில் கணவர் திருமணமாகி 10 நாட்களிலே கட்டாருக்கு வேலைக்கு சென்றிருக்கின்றார் அங்கு 06 மாதம் நன்றாக வேலை செய்து அங்கு அவருக்கு இடம்பெற்ற விபத்தில் கோமா நிலை அடைந்து பக்கவாதமும் ஏற்படுகின்றது.
அதன் பிறகு குறித்த நபரை இன்சூரன்ஸ் கம்பனி தேவையான பணத்தை கொடுத்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றார்.
இந்த நிலையில் மனைவி கணவரை தனது பிள்ளைப்போல் பார்த்து வரும் போது கணவரே தனது நண்பருக்கு மனைவியை திருமணம் செய்து வைத்துள்ளார்.
குறித்த பெண் தற்போது இரண்டு கணவருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றார். குறித்த பெண்ணை எல்லோரும் தவறாக பேசுகிறார்கள் என முதல் கணவர் தனது மனைவியை சட்டபூர்வமாக விவாகரத்து செய்துள்ளார்.
இந்த நிலையில் இரண்டாவது கணவருடன் மனைவிக்கு 2 பிள்ளைகளுடன் தனது முதல் கணவரையும் சொந்த பிள்ளைப்போல் பார்த்து வருகின்றார்.