யாழ்ப்பாணம் தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் சொகுசு பேருந்து மோதியதில் ஆணொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (25) இரவு 10 மணியளவில் கொடிகாமம், இராமாவில் பகுதியில் நிகழ்ந்தது.
வீதியில் இளவயதான ஆணொருவரை மோதிய பின்னர், பேருந்து தொடர்ந்து பயணித்ததாக கூறப்படும் நிலையில், பொலிசாரால் விரட்டிச் செல்லப்பட்டு பேருந்து மடக்கிப் பிடிக்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்தவர் கிளிநொச்சி, உதயநகர் பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது.
உயிரிழந்த நபர் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த போது, யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற சொகுசு பேருந்து அவரை மோதியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அதேவேளை உயிரிழந்த கிளிநொச்சி நபர் ஏற்கனவே கால் ஒன்றை இழந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.