யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணொருவரை ஹயஸ் ரக வாகனம் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மந்திகை பகுதியில் அமைந்துள்ள இலங்கை வங்கி கிளைக்கு அருகில் நேற்று திங்கட்கிழமை (25) குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதேவேளை பிரதான வீதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன், விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற ஹயஸ் வாகனத்தை அடையாளம் கண்டுள்ளதாகவும், அதன் சாரதியை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.