அதுருகிரிய, கல்வருஷாவ வீதியில் அமைந்துள்ள, புலம்பெயர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘முதுவா’ என அழைக்கப்படும் தனுக அமரசிங்கவின் வீடொன்றின் மீது இன்று (27) அதிகாலை சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
வீட்டின் மீது சுமார் 7 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதலில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
துப்பாக்கிச்சூட்டில் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துருகிரிய மற்றும் நவகமுவ பிரதேசங்களில் இடம்பெற்ற பல குற்றச்செயல்கள் முத்துவாவின் தலைமையில் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.