107 இ.போ.ச டிப்போக்களில் 70 டிப்போக்களின் ஊழியர்களுக்குப் பல மாதங்களாக மாதாந்த சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை என இலங்கை போக்குவரத்து சபை குற்றம் சுமத்தியுள்ளது .
திறை சேரி மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்டு வந்த ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
8 மாதங்களுக்கு மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை
இந்நிலையில் இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் , இலங்கை போக்குவரத்து சபை பஸ் சாரதிகள் மற்றும் பஸ் நடத்துநர்களுக்கு 8 மாதங்களுக்கு மேலாகியும் சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையில் இடம்பெறும் சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் ஊழல் முறைகேடுகளினால் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அதேசமயம் இலங்கை போக்குவரத்துச் சபையின் 4,700 பஸ்கள் நாளாந்தம் இயங்குகின்ற நிலையில் , சபையின் நாளாந்த வருமானம் 80 மில்லியனுக்கும் அதிகமாகும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .