கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் குறிப்பிடத்தக்க வீதத்தில் குறைவடைந்துள்ளது.
குறித்த தகவலை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த மாதம் 5.9 சதவீதமாக பதிவாகியிருத்த பணவீக்கமானது, இம் மாதம் 0.9 வீதமாகக் குறைவடைந்துள்ளது.
காரணம்
இருப்பினும், உணவுப் பணவீக்கம் பெப்ரவரியில் 3.5 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதேவேளை, பெப்ரவரியில் 7 சதவீதமாக இருந்த உணவு அல்லாத வகை பணவீக்கம் மார்ச் மாதத்தில் மைனஸ் 0.5 சதவீதமாக குறைந்ததே மார்ச் மாதத்தில் பணவீக்கம் குறைந்ததற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.