வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிக்காக விளையாட்டு இல்லங்கள் தாயார் செய்வதற்காக மூங்கில் மரங்களை வெட்டச் சென்ற இரு மாணவர்களுக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.
தெனியாய பிரதேச பாடசாலையொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விளையாட்டுப்போட்டி நேற்று வியாழக்கிழமை (28) இடம்பெறவிருந்த நிலையில், இரவுவேளை பாடசாலை மைதானத்தின் அருகில் மூங்கில் மரங்களை வெட்டச் சென்ற போதே மின்சாரம் தாக்கியுள்ளது.
அதிசக்தி வாய்ந்த மின் கம்பிகள்
மூங்கில் மரங்களிற்கு அருகிலிருந்த பாரிய மின்கடத்தியில் பொருத்தப்பட்டிருந்த அதிசக்தி வாய்ந்த மின் கம்பிகள் எரிந்ததன் காரணமாகவே மின்சாரம் தாக்கியுள்ளது.
மின்சார தாக்கத்திற்குள்ளான மாணவர்கள் தெனியாய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்தோடு, அவர்களில் ஒருவர் மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளார்.
இந்நிலையில் மாணவர்களின் உடல் நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.