முதலில் எந்த தேர்தல் நடாத்த வேண்டும் என்பதை நீங்களே முடிவெடுங்கள் என முன்னாள் நிதியமைச்சர் பசில்ராஜபக்ச பொதுஜனபெரமுனவின் நிறைவேற்றுக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலிற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்துங்கள் என என்னுடைய தனிப்பட்ட கருத்தினையே நான் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்தேன் எனவும் பசில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனிப்பட்ட கருத்து
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இடம்பெற்ற பொதுஜனபெரமுனவின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே பசில் ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலே முதலில் இடம்பெறவேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என பசில் ராஜபக்ச தெரிவித்ததாக கட்சியின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையிலேயே முதலில் எந்த தேர்தல் நடாத்த வேண்டும் என்பதை நீங்களே முடிவெடுங்கள் பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.