உலகவாழ் கிறிஸ்தவ மக்கள இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு கிறிஸ்தவர்களினால் அனுட்டிக்கப்படுகிறது.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பலஸ்தீனில் வாழ்ந்து இறையாட்சி பற்றி மக்களுக்கு போதித்து, சிறையில் அறையுண்டு இறந்த இயேசு கிறிஸ்து 3 நாட்களின் பின் கல்லரையிலிருந்து உயிர்த்தெழுந்தார்.
இயேசுவின் உயிர்த்தெழுல் நிகழ்வு
நியாயமும் சத்தியமும் என்றும் மரிப்பதில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே இயேசுவின் உயிர்த்தெழுல் நிகழ்வு அமைந்துள்ளது.
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மூலம் மனிதர்களுக்கு புதுவாழ்வு கிடைத்ததுடன், பேரின்பத்திற்கான வழியும் திறக்கப்பட்டதாக கிறிஸ்தவ மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இந்நாளில் கிறிஸ்தவர்கள் இயேசுவின் துன்பம், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நினைவுகூருவதுடன், 40 நாள் தவக்காலம், உயிர்த்த ஞாயிறான இன்று முடிவடைகிறது.
இன்றைய நன்நாளில் கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று, விசேட வழிபாடுகளில் ஈடுபடுவது பண்டைய காலம் தொட்டு பின்பற்றப்படும் மரபு ரீதியான செயற்பாடாகும்.