பண்டிகைக் காலத்தில் உள்ளுர் முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக இருப்பினும் சந்தையில் கோழி இறைச்சியின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
கோழி இறைச்சி
குறிப்பாக பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை சந்தைக்கு தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறைந்த விலையில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் நுகர்வோருக்கு கிடைக்கும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் முட்டை விலை குறைந்தாலும் சந்தையில் கோழி இறைச்சியின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.