கோடை காலத்தில் குழந்தைகளுக்கு ஏசி போட்டு தூங்க வைக்கும் பெற்றோர்களுக்கான பதிவே இதுவாகும்.
குழந்தைகளை ஏசி-யில் தூங்க வைக்கும் பெற்றோர்
கோடை காலம் நடந்து கொண்டிருப்பதால் வெயிலின் தாக்கமும் அதிகமாகவே இருந்து வருகின்றது. இதனை சமாளிக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தவித்து வருகின்றனர்.
ஆனால் சற்று வசதி படைத்தவர்கள் ஏசி-யை அறைக்கு வைத்துக்கொண்டு எந்தவொரு சிரமம் இல்லாமல் இருக்கும் நிலையில், குழந்தைகளுக்கு ஏசி-யை பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படுமாம்.
குழந்தைகள் தொடர்ந்து ஏசி-யில் பயன்படுத்துவதால், உடல் வளர்ச்சியையும், நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கின்றது.
குழந்தைகளின் தோல் மிகவும் மென்மையாக இருப்பதால், தோலில் வறட்சி மற்றும் அறிப்பு ஏற்படலாம். மேலும் மூக்கு மற்றும் தொண்டை பாதிக்கப்படுவதுடன் சுவாச பிரச்சினையையும் ஏற்படுத்துகின்றது.
ஆனால் குழந்தைகளுக்கு குளிர்ச்சியான சூழல் தேவையில்லையாம். ஏனெனில் அவர்களின் வளர்ச்சிக்கு சமச்சீரான வெப்பநிலை அவசியமாம்.
கோடை காலத்தில் தேவைக்கு மட்டும் ஏசியை சிறிது நேரம் மட்டும் பயன்படுத்துங்கள். மேலும் 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் மட்டுமே வைக்கவும்.
இயற்கை காற்று அதிக நன்மை பயக்கும்:
பொதுவாகவே, சிறு குழந்தைகளுக்கு இயற்கை காற்று சூழல் மிகவும் நல்லது. எனவே, முடிந்தவரை அறையின் ஜன்னல்களைத் திறந்து வையுங்கள்.
அதுபோல, குழந்தைகளை காலை சூரிய ஒளியில் தவறாமல் காட்டுங்கள். அது அவர்களின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
முக்கியமாக, ஏசி பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்கவும்.