இந்து மதத்தில், வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், செவ்வாய்கிழமை அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
செவ்வாய்க் கிழமைகளில் அனுமனை வழிபடுவதும், விரதம் அனுஷ்டிப்பதும் அனுமனின் அருளைப் பெற உதவும். மத நம்பிக்கைகளின்படி, செவ்வாயன்று தானம் செய்வதால், வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
அனுமனுக்கு பிடித்தமான பொருட்களை செவ்வாய் கிழமை அன்று தானம் செய்ய வேண்டும். எந்த பொருட்களை தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
லட்டு
அனுமனுக்கு லட்டு மிகவும் பிடித்த உணவுப்பொருள். எனவேதான், பூஜைகளின் போது அவருக்கு லட்டு படைக்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, உங்கள் பதவி உயர்வு நீண்ட காலமாக தடைபட்டிருந்தால், செவ்வாய் கிழமை அன்று அனுமன் கோவிலுக்கு கடலை மாவு லட்டுவை தானமாக கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அனுமன் பகவானின் அருளால் வருமானம் பெருகுவதுடன் பதவி உயர்வும் கிடைக்கும்.
தேங்காய்
செவ்வாய் கிழமை தேங்காயை தானம் செய்வது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, உங்கள் வீட்டிலோ அல்லது உங்களுக்கோ நீண்ட நாட்களாக உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், செவ்வாய் கிழமையன்று கோவிலில் தேங்காய் தானம் செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். நோயிலிருந்து விரைவில் விடுபடலாம்.
சிவப்பு ஆடைகள் மற்றும் பழங்கள்
அனுமனுக்கு சிவப்பு நிற ஆடைகள் மிகவும் பிடித்தவை என கூறப்படுகிறது. செவ்வாய்க் கிழமையன்று ஏழைகளுக்கு சிவப்பு நிற ஆடைகள் மற்றும் சிவப்பு நிற பழங்களை தானம் செய்வது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் செவ்வாய் தோஷங்களில் இருந்து விடுபடலாம்.
மைசூர் பருப்பு
ஜோதிடத்தின் படி, தங்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள், ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் அனுமனை வழிபட வேண்டும். இந்த நாளில் சிவப்பு பருப்பை தானம் செய்வதன் மூலம் ஹனுமான் மகிழ்ச்சி அடைகிறார். செவ்வாய் கிழமையில் இந்த பரிகாரத்தை செய்வதால் செவ்வாய் தோஷம் குறைவதுடன் திருமணத்தில் தடைகள் நீங்கும்.
துளசி
இந்து மதத்தில் துளசி செடி மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, செவ்வாய் கிழமை அன்று அனுமனுக்கு துளசி இலைகள் அல்லது துளசி மாலை அணிவிப்பது நல்லது. துளசி இலைகளை தானம் செய்வதன் மூலம், ஒரு நபர் தனது வாழ்க்கையில் ஒருபோதும் பணத்திற்கும் தானியத்திற்கும் பற்றாக்குறையை சந்திப்பதில்லை.