ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை இன்று பொருளாதார மத்திய நிலையங்களில் அதிக விலையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ புதிய கோழி இறைச்சியின் சில்லறை விலை 1,400 ரூபா என குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை தோல் இல்லாத கோழி இறைச்சி 1,300 ரூபாவாகவும் , கறி கோழி ஒரு கிலோ 999 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.