வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது. மற்ற பழங்களை ஒப்பிடும் பொழுது வாழைப்பழம் மலிவான விலையில் கிடைக்கின்றது.
விலை குறைவாக இருந்தாலும் இதன் பயன்கள் ஏராளம். ஆனால் வாழைப்பழத்தை கண்ட நேரத்தில் சாப்பிட கூடாது. இதனை எப்பொழுது சாப்பிட வேண்டும் என்பதற்கு ஒரு வழிமுறை உள்ளது.
இந்நிலையில் வாழைப்பழத்தை சிலர் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆக இரவில் சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் சிக்கல் குறித்து பார்க்கலாம்.
வாழைப்பழம் சாப்பிடுவதால் நன்மைகள்
வாழைப்பழத்தில் இருக்கக்கூடிய பொட்டாசியம் இதில் முக்கியப்பங்காற்றுகிறது. இதயம் தொடர்பான பிரச்சனைகள், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனை இருப்பவர்கள் வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
வாழைப்பழம் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு குடல் புண்கள் வராது. மேலும் குடல் புண்கள் காணப்பட்டாலும் விரைவில் குணமாகும்.
பெண்கள் அடிக்கடி செவ்வாழை சாப்பிடுவதால் மாதவிலக்கு சீராகுமாம்.
ஆண்கள் தினமும் செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
செரிமான பிரச்சனையை சீராக்கும்.
உணவு சாப்பிட்ட உடனே வாழைப்பழம் சாப்பிட வேண்டாம். அரை மணி நேரம் கழித்து சாப்பிடுவது சிறப்பு.
ஆனால் இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும். வாழைப்பழம் கொழுப்பாக மாறி உடலில் தங்கிவிடுவதால் பிரச்சினை ஏற்படும்.