மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சரும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித தெவரபுருமவின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.
நேற்றிரவு வரை பெரும்பாலானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அன்னாரின் பூதவுடல் தற்போது மத்துகம யத்ததொலவத்த பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தேவரப்பெருமவின் மரணம் மின்சாரம் தாக்கியதில் உள்ளுறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டதன் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தேவரப்பெருமவின் குடும்ப உறுப்பினர்களின் பூதவுடல் இன்று மத்துகமை, யத்ததொலவத்த பிரதேசத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.
இதன்படி பாலித தெவரபுருமவின் உடல் அவர் உயிருடன் இருக்கும் போதே அவரே தயார் செய்த கல்லறையில் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.