இமதுவ ,பெகிரிஹேன பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றின் அறையிலிருந்து 18,000 மில்லி லீட்டர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இமதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
57 வயதுடைய தேரர் கைது
இமதுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கடந்த 17 ஆம் திகதி குறித்த விகாரையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 57 வயதுடைய தேரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து சட்டவிரோத மதுபானத்தை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இமதுவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இமதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.