இஸ்ரேல் (Israil) – ஈரான் (Iran) நெருக்கடி நிலைமை தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஸ்ரீலங்கன் விமான சேவை (Srilankan airlines) பயணிகளுக்கு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீலங்கன் விமான சேவை (Srilankan airlines) தமது விமானப் பயணப் பாதைகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவித்துள்ளது
ஸ்ரீலங்கன் விமான சேவை (Srilankan airlines) நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.
லண்டன் செல்லும் பயணிகள்
அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், ஐரோப்பிய நாடுகளுக்கான விமான நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்தவகையில், லண்டன் (London) செல்லும் பயணிகள் குறித்த நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்தை வந்தடையுமாறு ஸ்ரீலங்கன் விமான சேவை கோரியுள்ளது.
அதற்கமைய, விமான பயணம் ஒரு மணிநேரத்துக்கு முன்னதாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
பயணப்பாதை மாற்றப்படுவதால் ஏற்படும் தாமதங்களால் பயணிகளுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் ஸ்ரீலங்கன் விமான சேவை (Srilankan airlines) நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.