தந்தையின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் சூரியவெவ வெவேகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாகப் போதையிலிருந்த தந்தை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார் .
துப்பாக்கிச் சூடு நடத்திய தந்தை தப்பிச் சென்றுள்ளதுடன் மகனின் இடது கால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் தப்பியோடிய தந்தையை தேடி வருகின்றனர்.



















