கொழும்பு பேலியகொடையில் இன்று (2024.05.14) செவ்வாய்க்கிழமை மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இஞ்சியின் விலை
அதன்படி, ஒரு கிலோ கரட் 150 ரூபாவாகவும், ஒரு கிலோ பீன்ஸ் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ முட்டைக்கோஸ் 80 ரூபாவாகவும், ஒரு கிலோ லீக்ஸ் 180 ரூபாவாகவும்,
ஒரு கிலோ தக்காளி 60 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 100 ரூபாவாகவும், ஒரு கிலோ கறி மிளகாய் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ முள்ளங்கி 100 ரூபாவாகவும், ஒரு கிலோ கத்தரிக்காய் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ பூசணிக்காய் 60 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஒரு கிலோ வெண்டைக்காய் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ பீர்க்கங்காய் 300 ரூபாவாகவும், ஒரு கிலோ பீட்ரூட் 300 ரூபாவாகவும், ஒரு கிலோ வெங்காயத்தாள் 300 ரூபாவாகவும், ஒரு கிலோ தேசிக்காய் 1,100 ரூபாவாகவும், ஒரு கிலோ இஞ்சி 2,200 /3,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.